வற்றிப்போன வற்றாத ஜீவநதி!
ஜீவநதியான பிரம்மபுத்ரா, திடீரென்று வறண்டு போய், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதுநாள் வரை வற்றிப்போனதாக வரலாறே இல்லாத நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சி, ஏதோ ஒரு கடுமையான பின்விளைவுக்கு அச்சாரம் என்று பயப்பட ஆரம்பித்துள்ளனர் அந்த நதியை நம்பி வாழும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இந்திய மக்கள்.
இந்நிலையில், இந்த திடீர் வறட்சிக்கு காரணமே சீனா என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திபெத் பகுதியில் இருந்து ஓடிவரும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, மின்சாரத் தயாரிப்புக்காக என்று சொல்லி ஒரு அணையைக் கட்டியுள்ளது சீனா. ஆனால், ஆற்றின் நீரை சீனாவின் வறண்ட பகுதிகளுக்கு திசை திருப்புவதுதான் அதனுடைய முக்கிய நோக்கமாம்.
இந்தியாவின் பொருளாதாரம், விவசாயத்தை நம்பித்தான் உள்ளது. இப்படி நதியை மறித்துவிட்டால், இந்தியாவின் பொருளாதாரம் கீழே விழும். தெற்காசியாவில் கொடி கட்டிப் பறக்கலாம் என்பதுதான் சீனர்களின் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment