Translate

Thursday, April 5, 2012

கால் வளைந்த குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் விமோசனம்...


கால் வளைந்த குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் விமோசனம்...

நண்பர்களே இதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.....குழந்தைகளை காப்பாற்றுவோம்.


உள்வளைந்த கணுக்கால் ஊனமுள்ள குழந்தைகளுக்கு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில், தொண்டு நிறுவன உதவியோடு, இலவச உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பிறவியிலேயே இரு கால்களின் பாதங்களும் உள்நோக்கி வளைந்து இருந்தால், போலியோ பாதிப்பு என பெற்றோர் கருதுகின்றனர். இதை "பொன்சேத்தி' முறையில் அறுவை சிகிச்சையின்றி, "கியூர்' தொண்டு நிறுவன உதவியுடன் இலவச சிகிச்சையில் சரிசெய்யப்படுகிறது.

சென்னை ராயப்பேட்டை, அடையாறு குழந்தைகள் ஆஸ்பத்திரி, மதுரை, கோவை, தஞ்சை அரசு ஆஸ்பத்திரிகளுடன் தொண்டு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மதுரை ஆஸ்பத்திரியின் விரிவாக்க கட்டடத்தில் ஒவ்வொரு வெள்ளியும் இதற்காக பதிவு செய்யப்படுகிறது. இதற்கென ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிறந்த குழந்தைகள் முதல் பதிவு செய்யலாம். 6 மாதங்களில் வளைந்த கால் நேராகிறது. பதிவு செய்யும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு வாரமும் காலில் எலும்பு முறிவு பிரிவு டாக்டர்கள் மாவுக்கட்டு போடுகின்றனர். பின் 8 முதல் 3 ஆண்டுக்கு (குறைந்தது 4 முறை) இலவசமாக 1500 மதிப்புள்ள பிரத்யேக ஷூ வழங்குகின்றனர். இச்சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்வது அவசியம். பிசியோதெரபி சிகிச்சை தேவையில்லை.

"கியூர்' இயக்குனர் சந்தோஷ் ஜார்ஜ் கூறுகையில், ""உள்வளைந்த கால்கள் குறித்து பலருக்கும் விழிப்புணர்வு இல்லை. சிகிச்சை தொடர்பாக ஆஸ்பத்திரி ஊழியருக்கு பயிற்சி அளிக்கிறோம். மருத்துவ ஆவணங்களை பராமரிப்பதுடன், குழந்தைகளின் பெற்றோருக்கு கவுன்சிலிங் அளிக்கிறோம்,'' என்றார்.

ஒருங்கிணைப்பாளர் கே.காட்வின் ஜான் கூறுகையில், ""பிறவியிலேயே குழந்தைகள் உள்வளைந்த கால்களுடன் இருந்தால், எங்களை 24 மணி நேரமும் செயல்படும் "ஹெல்ப் லைனில்' 96000 23151ல் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

நண்பர்களே இதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.....குழந்
தைகளை காப்பாற்றுவோம்
Thankz 2 World record of tamil people facebook



No comments: