Translate

Wednesday, April 11, 2012

"வாசிப்பு வாழ்க்கைக்கு உதவுமா?"

"இவை உங்களுக்குத் தெரிந்த சம்பவங் களாகக்கூட இருக்கலாம். ஆனால், நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வதில் தவறு இல்லை. அறிஞர் அண்ணா அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அறுவைச் சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டபோது, 'இன்னும் ஒரு நாள் அதைத் தள்ளிப்போட முடியாதா?' என்று கேட்டார் அண்ணா.

'நீங்கள்தான் பகுத்தறிவுவாதி ஆயிற்றே. நீங்களுமா நல்ல நாள் எல்லாம் பார்க்கிறீர்கள்?' என்று சிரித்தபடி கேட்டார் அமெரிக்க மருத்துவர். 'ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் ஒரு நாளில் முடித்துவிடுவேன். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது. அதனால்தான் அதற்குள் புத்தகத்தைப் படித்துவிட விரும்புகிறேன்' என்றார்.
பகத் சிங்கைத் தூக்குத் தண்டனைக்காக அழைத்த போதுகூட, 'இந்தப் புத்தகத்தின் இன்னும் சில பக்கங்களைப் படித்துவிட்டு வந்துவிடுகிறேன்' என்றார். அண்ணாவுக்கு மறு நாள் குறித்த நிச்சயம் கிடையாது. பகத் சிங்குக்கோ மரணமே நிச்சயமாக இருந்தது. மரணம் குறித்தே கவலைப்படாமல் வாசித்தவர்கள் அவர்கள். வாசிக்கும்போது வாழ்க்கையைப் பற்றி ஏன் 

கவலைப்படுகிறீர்கள்?"
thankz 2 பாமரன் (Pamaran) facebook

No comments: