Translate

Showing posts with label social service. Show all posts
Showing posts with label social service. Show all posts

Wednesday, August 15, 2012

மனிதன்

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.

இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில
் நின்று பேச்சுக் கொடுத்தேன்.

“”வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்” என்று ஆரம்பித்தார். “”பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன். 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிரம் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப் போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தணும். வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா வந்துரும்? இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில. இந்த சிலாப தூக்குறேன். உள்ள “தண்ணி நிக்கிதா’ன்னு பாத்து சொல்றியா? கோச்சிக்காதே…” என்று உதவி கேட்கிறார்.

“”மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக் கூப்பிடுவாங்க?” ஏதோ… நானும் கேள்விகள் கேட்டேன்.

“”பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான் இது மேரி (மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன் கோயிலாண்டதான் ஊடு. கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழியில அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்கு ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.”

“”எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?”

“”எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. போயும் போயும் இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?ன்னு எங்காளுங்க கேழி (வசைச் சொல்) கேட்டாங்க. எஸ்.சி. ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு. ஆரம்பத்துல படாத கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துக் கெடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சாப் போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.

நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக் கூடாதெலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க. அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடியத் தொறந்தாப் போதும், ஆயிரக்கணக்குல கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும். பல்லக் கடிச்சிக்கினு உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியதுதான். வேல முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம். சாதாரணத் தண்ணியா அது. காதெல்லாம் சும்மா “கொய்ய்ய்ய்ய்ங்’ன்னு அடைச்சிக்கும். கண்ணு, காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்ன பண்றது? சோறு துன்னாவணுமே!

எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே… அழிச்சிருவானுங்க. எனக்கு அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதனாலதான் இன்னிக்கி வரிக்கும் நான் உயிரோட கீறேன்.”

“”இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலா காலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்.”

நன்றி : வினவு...


and thakz 2 
தமிழால் இணைவோம் facebook.



Tuesday, August 7, 2012

காரைக்குடியில் கல்விப் பிச்சை!

காரைக்குடியில் கல்விப் பிச்சை!


'பிச்சை புகினும் கற்கை நன்றே!’ என்கிறது மூதுரை. காரைக்குடி பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளி செல்வராஜ் பிச்சை எடுத்து 13 ஏழைக் குழந்தைகளைப் படிக்கவைத்துக்கொண்டு இருக் கிறார்.

''எனக்குச் சொந்த ஊரு உசிலம
்பட்டிங்க. அஞ்சு வயசு இருக்கிறப்ப, திண்ணையில் இருந்து கீழே விழுந்து காய்ச்சலில் படுத்துட்டேன். அப்போ என் கால் முடமாகிப்போச்சு. இருந்தாலும் தன்னம்பிக்கையோட, 1966-ல் பி.ஏ. பொருளாதாரம் முடிச்சேன். படிச்சு முடிச்சதும் மின் வாரியத்துலயும் லைப்ரரியிலயும் வேலை கிடைச்சது.

ஆனா, அதுக்கு லஞ்சமா 2000 ரூபாய் கேட்டாங்க. குறுக்கு வழியில் வேலையில் சேர எனக்குப் பிடிக்கலை. அதுக்காக, சும்மா இருக்கவும் பிடிக்கலை. சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட ஆரம்பிச்சேன். அப்படியே சைக்கிள் மெக்கானிக் வேலைகளைக் கத்துக்கிட்டு, மதுரை, சென்னை, புதுச்சேரி, எர்ணாகுளம், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம்னு ஊரு ஊராப் போனேன். எங்கேயும் எனக்கு வேலை நீடிக்கலை. நான் படிச்ச படிப்பு எனக்கு வேலை கொடுக்கலை.

இருந்தாலும் அந்தப் படிப்பு வீணாப் போயிடக் கூடாதுனு நெனச்சேன். எங்கே போனாலும், தங்கி இருக்கும் இடத்தில் நாலைஞ்சு பிள்ளை களுக்கு இலவசமா டியூஷன் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். அங்கே இங்கே சுத்திட்டு, கடைசியா காரைக்குடிக்கு வந்து சேர்ந்தேன். 'நான் ஒண்டியாளு.. எந்த வேலை கொடுத்தாலும் பாக்குறேன்’னு சொல்லி பல இடங்கள்ல வேலை கேட்டேன். செட்டியார் ஒருத்தரு சைக்கிள் கடையில் 50 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குக் கூப்பிட்டாரு. 50 ரூபாயைவெச்சு என்ன பண்றது? அதனால, கௌரவம் பாக்காம பஸ் ஸ்டாண்டுல கையேந்த ஆரம்பிச்சுட்டேன். தன்மானத்தை விட்டு பிச்சை எடுக்குறது எனக்கும் பிடிக்கலைதான். ஆனா, என்ன பண்றது... வயிறு இருக்கு.

என்னை நம்பி 13 புள்ளைங்க வேற இருக்கு. யாராச்சும் வேலை கொடுத்தா, இப்பவே இந்தப் பொழப்பை விடுறதுக்கு நான் தயாரா இருக் கேன்!'' அழுத்தமாகச் சொன்ன செல்வராஜ், ''காலையில் 7 மணியில் இருந்து 11 மணி வரை பஸ் ஸ்டாண்டுல பிச்சை எடுப்பேன். அப்புறம் மதியச் சாப்பாட்டை பார்சல் வாங்கிட்டு வீட்டுக்குப் போவேன். குளிச்சு சாப்பிட்டுட்டு, மறுபடியும் பஸ் ஸ்டாண்டுக்குப் போவேன். 5 மணி வரைக்கும் பொழப்பைப் பாத்துட்டு வீட்டுக்குக் கௌம்பிடுவேன். 5.30 மணிக்கு எல்லாம் என்கிட்ட டியூஷன் படிக்கிற குழந்தைகள் வீட்டுக்கு வந்துடுவாங்க. 8 மணி வரைக்கும் அவங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். பிளாஸ்டிக் சாமான்கள் விக்கிறவங்க, பினாயில் விக்கிறவங்க பிள்ளை களுக்குத்தான் நான் டியூஷன் எடுக்குறேன்.

எனக்கு வர்ற வருமானத்துல, நோட்டுப் புத்தகங்கள், ஜியோமென்ட்ரி பாக்ஸ் வாங்கிக் கொடுப்பேன். போன வருஷம் அதுக்காக 2000-ம் ரூபாய் வரைக்கும் செலவாச்சு. இந்த வருஷம் 1500 ரூபாய் செலவாச்சு. நான் வாங்கித் தர்றதைப் பாக்கும்போது, அந்தப் புள்ளைங்க முகத்தில் நிறைஞ்ச சிரிப்பு வரும். அதுக்காகவே என்ன வேணாலும் பண்ணலாம் சார்!'' கும்பிட்டு விட்டு தரையில் காலை இழுத்தபடி நகர்ந்து செல்கிறார் செல்வராஜ்!.


thankz 2 
டக்ளஸ் அண்ணா facebook

Thursday, July 5, 2012

இரண்டு ரூபாய் !!!

இவர் பெயர் சந்திரவதனன்.ஊர் ஜோலார்பேட்டை.MBBS பட்டம் பெற்ற மருத்துவர்.1963-ல் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற நாள் முதல் இன்று வரை சைக்கிளில் கிராமம் கிராமமாக நோயாளிகளை தேடிச்சென்று சிகிச்சை அளித்து வருகிறாராம்.சொந்தமாக கிளினிக் இல்லை,மருந்துக்கடை இல்லை,தேவையில்லாத டெஸ்டுகளும்,ஸ்கேன்,எக்ஸ்ரே எடுக்க சொல்லுவதில்லை,ஸ்கேன் கம்பெனிகளிடம் இருந்து கமிஷன் வாங்குவதில்லை,கிராமங்களுக்கு மக்களை நாடி இவர் பயணிப்பதும் மிதி வண்டியில்தான்,இத்தகு எளிமையான,சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் சந்திரவதனன் வாங்கும் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா? வெறும் இரண்டு ரூபாய்தான்.இவர் ஆயிரத்தில் ஒருவர் அல்ல,கோடியில் ஒருவர்,இந்த கமிஷன் உலகத்திலும் மருத்துவ தொழிலை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வரும் மருத்துவர் திரு.சந்திரவதனனுக்கு பெருமையுடன் thankz.
tahnkz 2 இன்று முதல் தகவல் facebook.

Thursday, June 28, 2012

இவன்தான் மனிதன்!

இவன்தான் மனிதன்!

இந்தப் படத்தில் உள்ள பெரியவரின் பெயர்... மா சான்ஸியோ. சீனாவைச் சேர்ந்த 62 வயதாகும் இந்த முதியவர், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு Blood poisoning எனப்படும் மோசமான நோய் (Septicemia) உண்டு. இதன் காரணமாக இரண்டு கால்களையும் அடுத்தடுத்து இழந்துவிட்டவர். இந்நிலையிலும்கூட கடந்த 10 ஆண்டுகளாக ஆட்கள் நடமாட்டமே இல்லாத மலைப்பகுதியைத் தேர்ந்தெடுத்து, சுமார் 3,000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.

ரத்த காயம் எதுவும் ஏற்பட்டால், அந்த பாகத்தையே வெட்டியெடுத்துவிட வேண்டும் எனும் மோசமான உடல் நிலையில் இருக்கும் இவர், மரக்கன்று நடும் பணியின்போது தவறிவிழுந்து வலது கை சுண்டு விரலில் அடிபட்டு, அதுவும் வெட்டியெடுக்கப்பட்டு விட்டது. அதற்கு பிறகும்கூட, 'இதுதான் ஆத்ம திருப்தியான பணி. இதை எல்லோரும் செய்யுங்கள்' என்றபடியே மரக்கன்று நடும் வேலையைத் தொடர்கிறார்.
இவன்தான் மனிதன்!

The man shown in the photo is,Ma sanxiao,a 62 years old man with no legs..but still he has spent 10 years to plant more than 3000 trees in a remote mountain area in Hebei province,China.

thankz 2 Pasumai Vikatan facebook