நிறைய நீர்... கொஞ்சம் விஷம்!
வாழ்த்துகள்... கடைசியாக நாம் குடிக்கும் தண்ணீரையும் விஷமாக்கிவிட்டோம்.
நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் நிலத்தடி நீர் விஷமாகிவருவதை நாடாளுமன்றத்திலேயே ஒப்புக்கொண்டு இருக்கிறது இந்திய அரசு. மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, நாட்டின் 385 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் மிகுந்து காணப்படுகிறது; 267 மாவட்டங்களில் ஃபுளோரைடு மிகுந்து காணப்படுகிறது; 158 மாவட்டங்களில் தண்ணீர் உப்பாக மாறிவருகிறது; 63 மாவட்டங்களில் துத்தநாகம், குரோமியம், காட்மியம் போன்ற உலோகங்கள் மிகுந்து காணப்படுகிறது எனத் தொடங்கும் இந்த கட்டுரை நீர் விஷமாக மாறிய காரணங்களை கூறுகின்றன
நிலத்தடி நீராதாரம் நமக்கு அரிதானது என்பதாலேயே, நம்முடைய பாரம்பரிய நீர்ப் பயன்பாடுகள் நீர்நிலைகளைப் பிரதானமாகக்கொண்டு அமைந்து இருந்தன. ஆனால், சுதந்திரத்துக்குப் பின் - குறிப்பாக தொழில் புரட்சி, பசுமைப் புரட்சிக்குப் பின் இந்தக் கதை மாறியது. நீர்நிலைகள் மூலமான நீர்ப் பயன்பாடு குறைந்து, நிலத்தடி நீர்ப் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. மக்களுக்கும் நீர்நிலைகளுக்குமான நேரடி உறவுச் சங்கிலி அறுந்துபோகத் தொடங்கியது. தண்ணீர் நஞ்சாக மாற இதுவே அடித்தளம்.
அதீதமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு. வயல்களில் கொட்டப்படும் பல்லாயிரக்கணக்கான டன் ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் மண்ணில் ஊடுருவி நீரை நஞ்சாக்குக்கின்றன. நீர்வளத் துறை அறிக்கையில், அதிர்ச்சி அளிக்கக்கூடிய இன்னொரு விஷயம், மாநகரங்களுக்கு இணையாக கிராமப் பகுதிகளிலும் நிலத்தடி நீர் நஞ்சாகிவருவது!
தொழிற்சாலைகள் எங்கெல்லாம் மிகுந்து இருக்கின்றனவோ, அங்கெல்லாம் நீர் நஞ்சாகி இருக்கிறது. தொழிற்சாலைகள் மூலமான பாதிப்பு இரு வகைகளில் நடக்கிறது. ஒன்று, நதிகளில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதன் மூலம் நதி நீரும் நஞ்சாகி, மண்ணிலும் அது ஊடுருவுவது. இன்னொன்று, ஆலை அமைந்து இருக்கும் பகுதியைச் சுற்றி நிலத்தடி நீர் நஞ்சாவது. தொழிற்துறையினரின் அதீதமான, கட்டுப்பாடற்ற செயல்பாடும் அரசின் கண்காணிப்பின்மையும் நீரில் நஞ்சாக மாறுகின்றன!
தண்ணீரை நஞ்சாக்குவதில் ரசாயனக் குப்பைகளுக்கு - குறிப்பாக மின்னணுக் குப்பைகள், மருத்துவக் கழிவுகளுக்கு - முக்கியப் பங்கு உண்டு. எந்தப் பொறுப்பும் இல்லாமல், பழத் தோலில் இருந்து செல்பேசி ரேடியம் பேட்டரிகள் வரை பாலிதீன் பையில் திணித்து குப்பைத் தொட்டியில் வீசும் கலாசாரம் நீரில் நஞ்சாகப் பிரதிபலிக் கிறது!
சுகாதாரமற்ற நீரால் உலகில் ஒவ்வோர் ஆண்டும் 50 லட்சம் பேர் உயிர் இழக்கிறார்கள்.
நம் வருங்கால தலைமுறை ஆரோக்கியமாக இருக்க நீர்வளம் காப்போம்.
thankz 2 Funny Tamil Cartoons facebook

No comments:
Post a Comment