Translate

Friday, May 18, 2012

இளமையா இருக்க ஆசையா?

இளமையா இருக்க ஆசையா?
‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.
‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு.
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில்சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள ் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!
சோற்றுக் கற்றாழைக்குசித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும ் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங் களை கொண்டது.
தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிபற்றாமலிருப்பதற ்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.
கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக்குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும்.
கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.
இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.
மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதா ல் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையு ம் அதிகரிக்கிறது.

thankz 2 இன்று முதல் தகவல்.Today First Message facebook

No comments: