Translate

Monday, February 4, 2013

தாய்த்தமிழ்ப் பள்ளி ஆவணப்படம்




திருப்பூரில் உள்ள தாய்த் தமிழ் பள்ளி மிகச் சிறப்பாக மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கிறது. தமிழ் வழிக் கல்வியை போதிக்கும் இந்தப் பள்ளி ஒரு அரசுப் பள்ளி அல்ல, தனியார் தமிழ்ப் பள்ளி. இங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலை செய்யும் ஆசியர்கள் அனைவரும் தூய தமிழில் ஆங்கிலக் கலப்பின்றி பேசுகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு ஆங்கில அறிவு இல்லாமல் இல்லை . எவ்வளவு ஆங்கிலம் தேவையோ அந்த அளவிற்கு ஆங்கிலம் கற்று வைத்துள்ளனர். ஆசிரியர்களை 'மிஸ்' என்று மாணவர்கள் அழைப்பதில்லை . 'அக்கா' என்று உறவாடி மகிழ்கின்றனர். மற்ற தமியார் பள்ளிகளை போல் மதங்கள் சமயங்கள் இங்கு போதிகப்படுவதில்லை . தமிழை மட்டுமே முன்னிருத்துகின்றனர் . தாய் மொழியில் கல்வி கற்கும் இவர்கள் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களை விட அறிவில் சிறந்தவர்களாக விளங்குகின்றனர். நன்னெறிகளை நாள் தோறும் படிக்கும் இவர்கள் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகின்றனர். இது போன்ற தாய் தமிழ் பள்ளிகள் நிறைய தமிழ் நாட்டில் தொடங்கப்பட வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் வேண்டுகோள் . இந்தப் பள்ளியை நடத்தும் தமிழ் ஆர்வலர்களுக்கு வாழ்த்துகள்.
thankz 2 தூய தமிழ்ச்சொற்கள் facebook.

No comments: