Translate

Sunday, November 18, 2012

ஒரு தகவல்

நேற்றுதான் ஒரு தகவல் படித்தேன்.
இந்தியாவில் மரங்கள் இருந்த நிலப்பரப்பு 33 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைந்துவிட்டதாம். இதனால் மழையின் அளவும் பாதியாகக் குறைந்து ஏதோ வருகிற மழையும் பருவம் தவறிய காலங்களில் மழை வந்து வியசாயத்துக்கு கேடுதான் விளைவிக்கிறதாம்.இதனை சரி நிவர்த்தி செய்ய 55 கோடி மரங்கள் புதிதாக நடவேண்டுமாம்.

ஒரு விதை முளைத்து மரமாக சராசரியாக நான்கு ஆண்டுகள் ஆகும். இவ்வளவு மரக்கன்றுகளை யார் நடுவது,,?? வளர்ப்பது?? பாதுகாப்பது?. அதற்குள் இன்னும் எத்தனை மரங்கள் அழிந்து, அழிக்கப்பட்டுவிடுமோ?....

போதாக்குறைக்கு தொழிலகங்கள், வாகனங்கள் மற்றும் இதர மாசுபடுத்தும் மூலங்களைச் சரிகட்ட இன்னும் ஏராளமான மரங்கள் உருவாக்கப்பட்டால்தான் வருங்காலத்தில் இந்தியாவில் விவசாயம் என்று ஒன்று இருக்கும்.
இல்லாவிட்டால் உணவுத்தேவைக்காக வெளிநாடுகளில் கையேந்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம்.
அப்படியே நாம் கேட்டாலும் தருவதற்கு மற்ற விவசாய நாடுகளிலும் நிலைமை ஒன்றும் பிரமாதமாக இல்லை, நம் நிலையை ஒட்டியே உள்ளது.
ம்ம்ம்ம்..
வேதனையே மிஞ்சுகிறது...

கரீம் கனி


thankz 2 
சமூக வலைதள வசவுகள் facebook.

No comments: